மருத்துவமனைகளில் கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும்.., சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்
ஐஐடி இயக்குனர் பேசிய சர்ச்சை கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
சீமான் பேச்சு
ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பில், "மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும். அதில், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இதனை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. இந்த ஆவணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.
இவரின் பேச்சு சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாஜக மூத்த தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில், "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்.., மகாகும்பமேளாவுக்கு 51 லிட்டர் பசும்பால் நேர்த்திக்கடன்
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "மருத்துவமனைகளை மாட்டு கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம்.
மாட்டு பால் குடிக்கிறவர் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவர் கீழ்சாதி, மாட்டு கோமியம் குடிக்கிறவர் உயர்ந்த சாதி. நம் நாட்டில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, கோமியம் குடிக்கப்படுகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |