செட்டிநாடு ஸ்டைல் நண்டு மசாலா: ரெசிபி இதோ
உடல் எடையை குறைக்க நண்டு உணவை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு பெரும் நன்மை தருகிறது.
சூடான சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சாப்பிட இந்த நண்டு மசாலா அருமையாக இருக்கும்.
நாவூறும் சுவையில் செட்டிநாடு ஸ்டைல் நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நண்டு- 1kg
- வெங்காயம்- 3
- தக்காளி- 4
- பூண்டு- 8 பல்
- இஞ்சி- சிறிய துண்டு
- பச்சை மிளகாய்- 6
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து பின் சோம்பு சேர்த்து பொரிந்ததும் அதில் இஞ்சி, பூண்டு, நறுக்கிய 2 வெங்காயம், கருவேப்பிலை, 4 பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இதில் நறுக்கிய 3 தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து இதை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நல்லலெண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து பொரிந்ததும் அதில் இடிச்ச இஞ்சி, கருவேப்பிலை, நறுக்கிய 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய 1 தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின் கலந்து வைத்துள்ள நண்டு மற்றும் மசாலாவை சேர்த்து கொத்தமல்லி சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் இறுதியாக இதில் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி இறங்கினால் செட்டிநாடு ஸ்டைல் நண்டு மசாலா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |