மிகக் கடுமையான அச்சுறுத்தல்... சுருண்டு விழுந்து சாகும் பறவைகள்: 5,000 கடந்த எண்ணிக்கை
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பறவைகள் காப்பகத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கொக்குகள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் மிகக் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் பரவல் என்பது, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவு என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் வழியாக ஆபிரிக்கா செல்லும் வழியில் ஹுலா பள்ளத்தாக்கில் அரை மில்லியன் கொக்குகளில் குறைந்தது 5,200 எண்ணிக்கையில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காப்பகத்தின் ஊழியர்கள், இறந்த கொக்குகளை துரிதமாக அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த பறவைகளை உணவாகக் கொள்ளும் வல்லூறுகளுக்கு அதனால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 5,200 கொக்குகள் இறந்ததாக வெளியான தகவலையடுத்து, இன்னொரு 10,000 கொக்குகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தச் சூழல் மிக அச்சுறுத்தலான விடயம் எனவும் நாட்டின் வரலாற்றில் வனவிலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள மிகக் கொடிய பாதிப்பு இதுவெனவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் Tamar Zandberg குறிப்பிட்டுள்ளார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதியில் அரை மில்லியன் கோழிகள் கொல்லப்பட உள்ளதாக வேளாண் அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 கொக்குகள் இஸ்ரேல் வழியாக ஆப்பிரிக்கா செல்லும் வழியில் ஹூலா பள்ளத்தாக்கில் ஓய்வெடுத்து செல்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலானது கடந்த ஆண்டைவிடவும் மிக அதிகம் என குறிப்பிட்டுள்ள மூத்த அதிகாரிகள்,
சுமார் 30,000 கொக்குகள் குளிர்காலத்திற்காக இப்பகுதியில் தங்கியிருக்க வாய்ப்பிருதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.