அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென சுவிட்சர்லாந்தில் தரையிறக்கம்: பின்னணி
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, சூரிச்சில் திடீரென தரையிறக்கப்பட்டது.
விமானி உதவி கோரியதைத் தொடர்ந்து சூரிச் பொலிசார் விமானத்திலிருந்த ஒரு பயணியை வெளியேற்றினார்கள்
நேற்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, சூரிச்சில் திடீரென தரையிறக்கப்பட்டது.
ஏதென்ஸிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, சூரிச்சில் திடீரென தரையிறக்கப்பட்டது.
பயணி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, அந்த விமானத்தின் விமானி, இனியும் அந்த பயணியுடன் பயணிப்பது பாதுகாப்பானதல்ல என முடிவு செய்தார்.
image -Twitter
ஆகவே, அவர் சூரிச் விமான நிலையத்துக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, சூரிச்சில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானி உதவி கோரியதைத் தொடர்ந்து சூரிச் பொலிசார் அந்த பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றினார்கள்.
அதன் பிறகு அந்த விமானம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
அந்த பயணி யார், அவர் எந்த நாட்டவர் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.