தன் கண்ணிமைகளில் உயிரினம் ஒன்று குடித்தனம் நடத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்த நபர்
மனித கண்ணிமைகளில் வாழும் உயிரினம் ஒன்றைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒருவர், தன் கண்ணிமைகளில் அப்படி ஏதாவது உயிரினம் வாழ்கிறதா என கண்டுபிடிக்க விழைந்துள்ளார்.
மனித கண்ணிமைகளில் வாழும் உயிரினம்
ஆய்வகத்தில் பணி செய்யும் Dave என்பவர், மைக்ரோஸ்கோப்களை பயன்படுத்துபவர் என்பதால், தன் கண்ணிமைகள் சிலவற்றைப் பிடிங்கி அவற்றைப் பரிசோதித்தாராம்.
அப்போது, தன் கண்ணிமைகளில் Demodex folliculorum என்னும் அந்த உயிரினங்கள் ஜோடியாக வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளார் Dave.
Image: Getty Images/iStockphoto
மனித முகத்தில் குடித்தனம் நடத்தும் உயிரினம்
Demodex folliculorum என்னும் இந்த உயிரினம், இரவு நேரத்தில் மனித முகத்தில் குடித்தனம் நடத்துமாம். அதாவது, மனித கண்ணிமைகளில் தொங்கிக்கொண்டே பாலுறவு கொள்ளுமாம்.
தன் முகத்தில் ஒரு உயிரினம் குடித்தனம் நடத்துவதை அறிந்த Dave முதலில் அதிர்ச்சியடைந்தாலும், இந்த உயிரினம் சாதாரணமாக பலருடைய உடலில் காணப்படும் ஒன்றுதான் என்பது பின்னர் தெரியவந்ததால் நிம்மதி அடைந்திருக்கிறார்.
ஒருபக்கம், இந்த உயிரினம் மனித முகத்தில் முகப்பரு உருவாவதைத் தடுப்பதுடன், தோலிலுள்ள துவாரங்கள் அடைத்துக்கொள்ளாமல் இருக்கவும் உதவுமாம். அதே நேரத்தில், அவற்றின் கழிவுகள் கண்ணில் பட்டால் கண் எரிச்சலும் ஏற்படலாம்.
Image: Getty Images
Image: University of Reading / SWNS