தொடர்ந்து 6 நாட்கள் சுவாசிக்காமல் உயிர் வாழக்கூடிய உயிரினம் இது தான்
உயிரினங்கள் தனக்கென தனி பண்பை வைத்திருக்கும் நிலையில் தொடர்ந்து ஆறு நாட்கள் சுவாசிக்காமல் வாழக்கூடிய உயிரினமும் உள்ளது.
எந்த உயிரினம்?
பூமியில் வாழும் மனிதர்களை போலவே ஒவ்வொரு உயிரினமும் தனக்கென தனி பண்புகள் மற்றும் குணங்களை கொண்டுள்ளன.
அந்த மாதிரியான ஒரு ஆச்சரியமான உயிரினத்தின் பண்புகளை தான் பார்க்க போகிறோம். விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை நாம் எடுத்துக் கொண்டால் தேள் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும்.
இவற்றால் கடினமான சூழ்நிலையில் கூட உயிர் வாழ முடியும். முக்கியமாக காற்றைச் சேமிக்கும் திறனை கொண்ட இந்த உயிரினம், ஆக்சிஜன் இல்லாமல் இருந்தாலும் தனக்குள் இருக்கும் காற்றை வைத்து அவற்றால் சுவாசித்து உயிர் வாழ முடியுமாம்.
இன்னொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தேளால் ஒரு வருடத்திற்கு கூட உணவு உண்ணாமல் வாழ முடியும் என்கிறார்.
அதேபோல, குறைந்த தண்ணீர் கொண்ட பாலைவனத்திலும் இவற்றால் உயிர் வாழ முடியுமாம். இது, பாறைகளுக்கு மத்தியிலும், காடுகளில் மற்றும் வறண்ட மண்ணிலும் வாழ்கிறது.
மேலும், இதன் உடலின் மீது புற ஊதா ஒளி படும் போது ஒளிர்கிறது. தேள் கடித்து 72 மணி நேரத்திற்குள் சிகிச்சை கொடுக்காவிட்டால் பெரும் ஆபத்தை கூட சந்திக்க நேரிடுமாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |