அடுத்து திவாலாகும் மிகப்பெரிய வங்கி இதுதான்... Lehman Brothers சரிவை கணித்த நிபுணர் வெளிப்படை
இரண்டு மிகப்பெரிய அமெரிக்க வங்கிகள் தீவாலாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த பேரிடியாக மூன்றாவது ஒரு வங்கியின் சரிவு தொடர்பில் நிபுணர் ஒருவர் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
கிரெடிட் சூயிஸ் வங்கி
கடந்த 2008ல் Lehman Brothers வங்கியின் சரிவை துல்லியமாக கணித்துள்ள Robert Kiyosaki என்பவர், தற்போது முக்கியமான கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
@AP
அதாவது சிலிக்கான் வேலி வங்கி, நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கி ஆகியவற்றுடன் மூன்றாவதாக சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட கிரெடிட் சூயிஸ் வங்கி மிக விரைவில் திவாலாகும் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிலிக்கான் வேலி வங்கியும் ஞாயிறன்று சிக்நேச்சர் வங்கியும் திவாலானதாக அறிவித்துள்ள நிலையில், சந்தை கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும், 2008ல் ஏற்பட்ட கடும் நெருக்கடியைப் போன்று இந்த அதிர்வலைகள் புதிய உலகளாவிய வங்கி நெருக்கடியை ஏற்படுத்தாது என நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க நேர்ந்தால், உண்மையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Robert Kiyosaki கணிப்பு
கிரெடிட் சூயிஸ் வங்கியே தங்களின் இக்கட்டான சூழல் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் சில மணி நேரம் முன்பு தான் Robert Kiyosaki அந்த வங்கியும் திவாலாகப் போவதாக தமது கணிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
@reuters
1856ல் கிரெடிட் சூயிஸ் வங்கி நிறுவப்பட்டத்தில் இருந்து இப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை என்றும் அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது Robert Kiyosaki கணித்துள்ளதை முற்றாக மறுத்துள்ளது கிரெடிட் சூயிஸ் வங்கி.
திங்களன்று வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்தில் பிரித்தானிய பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் சரிவடைந்து மொத்தமாக 50 பில்லியன் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியது.
அதேவேளை, அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் சரிவடைந்து 90 பில்லியன் டொலர் வரையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.