லண்டன் பங்குச் சந்தையில் ஒரேயடியாக பல பில்லியன்களை இழந்த கிரெடிட் சூயிஸ் வங்கி
வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட அச்சம் காரணமாக லண்டன் பங்குச் சந்தையில் பல பில்லியன்களை ஒரேயடியாக இழந்துள்ளது கிரெடிட் சூயிஸ் வங்கி.
75 பில்லியன் பவுண்டுகள்
பிரித்தானியாவில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் FTSE 100 குறியீடானது 3.83 சதவீதம் சரிவடைந்து 7,344.45 என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் 30 சதவீதம் வரையில் கடும் சரிவை எதிகொண்டுள்ளது. அதாவது ஒரேயடியாக 75 பில்லியன் பவுண்டுகளை கிரெடிட் சூயிஸ் வங்கி மொத்தமாக இழந்துள்ளது.
மட்டுமின்றி கிரெடிட் சூயிஸ் வங்கியின் முதன்மை முதலீட்டாளரான சவுதி தேசிய வங்கியும் மேலதிக முதலீடு தொடர்பில் தயக்கம் காட்டியுள்ளது. தங்கள் நிறுவனம் 1856ல் நிறுவப்பட்டத்தில் இருந்து இப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை என்று அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது.
நெருக்கடியை எதிர்கொள்ள நேரலாம்
ஆனால் கடந்த 2008ல் Lehman Brothers வங்கியின் சரிவை துல்லியமாக கணித்தவர்களில் ஒருவரான பொருளாதார நிபுணர் நூரியல் ரூபினி, கிரெடிட் சூயிஸ் வங்கியும் அப்படியான ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்ள நேரலாம் என எச்சரித்திருந்தார்.
இதனிடையே, சுவிஸ் மத்திய வங்கியில் இருந்து பொருளாதார உதவியை பெற கிரெடிட் சூயிஸ் வங்கி தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரெடிட் சூயிஸ் வங்கி மட்டுமல்ல, Barclays பங்குகள் 9% சரிவை சந்தித்துள்ளது. HSBC சுமார் 5% இழப்பை எதிர்கொண்டுள்ளது.
ஜேர்மனியின் Commerzbank வங்கி 9%, பிரான்சின் Societe Generale சுமார் 12 சதவீத இழப்பை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.