கிரீமியாவில் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள்: சுவாரஸ்ய பின்னணி
ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்த தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள்
ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில், பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள் மற்றும் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த அதிகாரிகள் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள்.

அதாவது, இந்த மோட்டார் சைக்கிள்களின் சத்தம் உக்ரைன் ட்ரோன்களின் சத்தம் போலவே உள்ளதாம்.
ஆகவே, மக்கள், இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்த தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரான Sergei Aksyonov தெரிவித்துள்ளார்.
இந்த விதி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரீமியா, ரஷ்யர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் ஒரு இடமாகும். அத்துடன், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைத்தளம் அங்குதான் உள்ளது.
ஆகவே, சமீப காலமாக உக்ரைன் கிரீமியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திவருகிறது.
அதனால் அப்பகுதிக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விடுமுறைக்காலம் துவங்கும் நிலையில், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு உருவாகிவருகிறது.
ஏற்கனவே, கார்களுக்கு 20 லிற்றர் எரிபொருள் மட்டுமே வழங்கப்படும் என்னும் ஒரு விதி கிரீமியாவில் அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |