சுனிதா வில்லியம்ஸை ஆரத்தழுவிய புதிய குழு: அற்புதமான நாள் என மகிழ்ச்சி..வெளியான வீடியோ
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்க சென்ற குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் சந்தித்த புதிய குழு
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கிளம்பிய நாசாவின் புதிய விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைந்தது.
விண்கலத்தில் சென்ற புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த பின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை சந்தித்தனர்.
All the hugs. 🫶
— NASA's Johnson Space Center (@NASA_Johnson) March 16, 2025
The hatch of the SpaceX Dragon spacecraft opened March 16 at 1:35 a.m. ET and the members of Crew-10 entered the @Space_Station with the rest of their excited Expedition 72 crew. pic.twitter.com/mnUddqPqfr
அவர்கள் இருவரும் புதிய குழுவினரை வரவேற்று ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அற்புதமான நாள்
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் உட்பட 7 பேர் உள்ளனர்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் சுனிதா வில்லியம்ஸ், "இது ஒரு அற்புதமான நாள். எங்கள் நண்பர்கள் வருவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
இதற்கிடையில் நாசா, வானிலை நன்றாக இருக்கும்பட்சத்தில் விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் 19ஆம் திகதி பூமிக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |