தோல்விக்கு இதுதான் காரணம் - மனம் திறந்து பேசிய CSK கேப்டன் தோனி
எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னையை வீழ்த்திய கொல்கத்தா
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்து பேசிய தோனி
இந்நிலையில், தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
முதல் பந்திலேயே எனக்கு தெரிந்து விட்டது, 180 ரன் எடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்று. அப்போதுதான் நினைத்தேன் முதலில் நான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருக்கக் கூடாது. மைதானத்தில் ரொம்ப ஈரப்பதம் இருந்தது. இதுதான் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து யாரும் விமர்சனமோ, குறைகளோ கூற முடியாது. அனைத்து வீரர்களுமே நன்றாகத்தான் முயற்சி செய்து விளையாடினார்கள் என்றார்.