‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் கிரிக்கெட் போட்டி! வைரலாகும் காணொளி
இலங்கையில் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் இளைஞர்கள் சிலர் சாலையிலே கிரிக்கெட் போட்டி விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் பல நாட்களாக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் கொழும்பில் கோட்டா கோ கம என்ற பெயரில் போராட்டக்களம் அமைக்கப்பட்டு மக்கள் அமைதியாக பல நாட்களாக போராடி வருகின்றனர்.
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவும் அமைதியாக மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் கிரிக்கெட் விளையாடி காணொளி வைரலாகியுள்ளது.
இனப்படுகொலை நினைவு தினத்தன்று தாக்குதல் திட்டம்! இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
காவல்துறையால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து கூம்பை ஸ்டம்புகளாக வைத்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
A game of night cricket at #SriLanka #GotaGoGama protest site. Heavy security in the area remains, but protests mostly calm pic.twitter.com/c45pkuyZEl
— Amantha (@AmanthaP) May 13, 2022
அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு உள்ள போதிலும் போராட்டக்காரர்கள் பெரும்பாலும் அமைதியாக போராடி வருகின்றனர்.