உலக கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் கடினம் - கங்குலி கருத்து
உலக கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் கடினம் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
படுமோசமாக தோல்வி அடைந்த இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில், 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணியிடம் இந்திய அணி படு மோசமாக தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை அவுஸ்திரேலிய அணி தட்டித் தூக்கியது. மேலும் ஐசிசி நிர்வாகம் நடத்தும் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற அனைத்து தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற பெருமையை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் இந்த படுமோசமாக தோல்வியை குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கங்குலி கருத்து
இந்நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி இது குறித்து கருத்து தெரிவித்து அவர் பேசுகையில், உலக கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வது தான் மிகவும் சிரமமானது. உலகக் கோப்பை போட்டியில் 4 அல்லது 5 போட்டிகளில் விளையாடினால் கூட அரையிறுதி போட்டிக்கு சென்று விடலாம். ஆனால், ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், 17 போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கும் என்றார்.