சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல்முறையாக 7 விக்கெட் வீழ்த்தி பவுலராகி மலேசியா வீரர் சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக 7 விக்கெட் வீழ்த்தி முதல் பவுலராகி மலேசியா வீரர் சியாஸ்ருல் இட்ரஸ் சாதனைப் படைத்துள்ளார்.
வீரர் சியாஸ்ருல் இட்ரஸ்
2024ம் ஆண்டு தொடங்க இருக்கும் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக ஆசிய மண்டல பி பிரிவு தகுதி சுற்று போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் மலேசியா - சீனா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மலேசிய அணி வெற்றி பெற்றது. இதில் விளையாடி மலேசியா அணியை சேர்ந்த சியாஸ்ருல் இட்ருஸ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@abpnadu
இப்போட்டியில், முதல்முறையாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். சியாஸ்ருல் இட்ருஸ் தற்போது 32 வயதாகிறது. இதுவரை இவர் 23 டி20 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
இதுவரை எந்த வீரரும் 20 ஓவர் போட்டியில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளுக்கு மேல் தீபக் சஹார், யஸ்வேந்திர சாஹல் எடுத்துள்ளனர். இப்பட்டியலில் மலேசியா பவுலரான சியாஸ்ருல் இட்ருஸும் தற்போது இடம் பிடித்திருக்கிறார்.
A seven-wicket haul in a T20I ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2023
Malaysia’s Syazrul Idrus claimed the best bowling figures in T20 history with 4-1-8-7 against China - all seven wickets bowled ?
(?: @ICC) pic.twitter.com/iZ6902tBF1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |