பணமோசடியில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.., கேரளாவில் அம்பலமான பின்னணி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 18.7 லட்ச ரூபாய் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு பயிற்சி மையம்
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள சூண்ட கண்ணபுரம் பகுதியில் சாரீஸ் பாலகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர்களான ராஜீவ்குமார் ( 50) வெங்கடேஷ் கினி (43) ஆகியோர் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் கட்டலாம் என்று சாரீஸிடம் கூறியுள்ளனர்.
மேலும், விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் எங்களுடன் உள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
இதனால், விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதற்கு கிரிக்கெட் வீரரும் கூட்டாளியாக இருப்பதால், கடந்த 2019 -ம் ஆண்டு ஏப்ரல் 25 -ம் திகதியில் இருந்து பல தவணைகளாக 18.7 லட்சம் ரூபாயை சாரீஸ் வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதற்கு எந்தவொரு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான சாரீஸ், இது தொடர்பாக அவர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், தாம் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டும், அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, கண்ணூர் நகர காவல்நிலையத்தில் சாரீஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதற்காக ராஜீவ்குமார், வெங்கடேஷ் கினி மற்றும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
அவர் அளித்த புகாரின்படி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 பேர் மீதும் பிரிவு 420 ( பண மோசடி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |