பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பல்: விரக்தியில் பாகிஸ்தான் கேப்டன்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் தங்கள் அணி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விரக்தியடைந்துள்ளார்.
சொதப்பும் பாகிஸ்தான்
13வது சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து காலிறுதிக்கு நுழைய அணிகள் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
விரக்தியில் பாபர் அசாம்
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், அணியின் செயல்பாடு குறித்து விரக்தியடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Twitter (@TheRealPCB)
அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் போது, பேட்டிங்கில் சொதப்புகிறோம். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் போது பீல்டிங்கில் சொதப்புகிறோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விரக்தியடைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |