திரைப்படமாகும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்க்கை வரலாறு? அவர் வேடத்தில் நடிப்பது இவரா?
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவதாக பலமான பேச்சு கிளம்பியுள்ளது.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை சகட்டுமேனிக்கு எடுக்கிறார்கள். அதிலும் கிரிக்கெட்டுக்கே முன்னுரிமை. டெண்டுல்கர், டோனியைத் தொடர்ந்து கபில்தேவ், பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாகின்றன.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை 800 என்ற பெயரில் திரைப்படமாக்க முயன்றதும், எதிர்ப்பு காரணமாக முரளிதரனாக நடிக்கயிருந்த விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும் சமீபத்திய நிகழ்வுகள்.
இந்த நிலையில் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ஆக்கப்படலாம் என கூறப்படுகிறது, அவர் வேடத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதற்கேற்றார் போல அண்மையில் ரசிகர்கள் இணையதளத்தில் அஸ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் எனக் கேள்விகள் கேட்டு உரையாடி வந்தனர்.
அதற்கு பல தரப்பினர் க்ரீன் சிக்னல் கொடுத்தனர். இதுகுறித்து, நடிகர் அசோக் செல்வன் கூறும்போது, இதற்கு நான் பொறுப்பில்லை என கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு டேக் செய்திருந்தார்.
அப்போது அதறகு ரிப்ளை செய்துள்ள அஷ்வின், இணைந்து பணியாற்றுவதற்கு முன்பாக கதையில் இருக்கும் சிஎஸ்கேவின் பகுதியை முதலில் முடித்து விடுவோம்.
எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அதற்கடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்து இருக்கிறார்.
ஆக வதந்தி தற்போது உண்மையில் உருவெடுக்க போகிறது எனவும் விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் நம்பப்படுகிறது.