கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா இந்த பிரபல நடிகரின் மருமகனா?
ஐபிஎல் தொடரில், நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிதிஷ் ராணா
ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா, 36 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசி 81 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதனையடுத்து, இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நிதிஷ் ராணா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், நிதிஷ் ராணா பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மருமகன் என தெரிய வந்துள்ளது.
நிதிஷ் ராணாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சாட்சி மர்மாவுடன் திருமணம் நடைபெற்றது.
சாட்சி மர்மா, நடிகர் கோவிந்தாவின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்த தகவலை, கோவிந்தாவின் அக்கா மகனான நடிகர் கிருஷ்ண அபிஷேக் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |