கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதித்து, இன்று பிரமாண்டமான உணவகத்தை நடத்தும் 6 வீரர்கள் - யார் யார் தெரியுமா?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற துணைக் கண்ட நாடுகளில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாகும்.
ஒரு விளையாட்டின் வெற்றி அந்த கிரிக்கெட் வீரர்களை தங்கள் நாடுகளில் சிறந்த ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களாக ஆக்குகிறது.
பணமும் புகழும் அவர்களின் கனவுகளை எளிதாக நிறைவேற்ற உதவுகின்றன.
வாழ்க்கையில் கடுமையான உணவுப் பிரியராக இருக்கும் சில கிரிக்கெட் வீரர்கள், உணவின் மீது பிரியம் உள்ளவர்களுக்கு உணவளிப்பதற்காக சில உணவகத்தை நடத்தி வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் பணம் சம்பாதிப்பதற்காக உணவகத்தை நடத்துகின்றனர்.
அந்தவகையில் கிரிக்கெட் வீரர்களின் உணவகங்கள் எங்கு இருக்கிறது என்பது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
1. விராட் கோலி- One8 Commune
விராட் கோலி தனது 15 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் இந்தியாவுக்காக அயராது விளையாடி உள்ளார். கிரிக்கெட் தவிர, batting maestro One8 Commune எனப்படும் உணவகங்கத்தை நடத்தி வருகிறார்.
குறித்த உணவகமானது 2022 ஆம் ஆண்டில் மும்பையில் மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமாரின் ஜூஹூவில் உள்ள பங்களாவில் நடத்தப்பட்டு வருகிறது.
சைவ உணவு உண்பவர்களுக்கு, இது ஒரு சரியான இடமாகும், ஏனெனில் இங்கு நிறைய சைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.
2. MS தோனி- Shaka Harry
MS தோனி இந்திய அணியில் (2004-2019) அவரது பதவிக் காலத்தில், அவர் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத்துவ திறன்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு திறமையாக பணியாற்றினார்.
டிசம்பர் 2022 இல், Shaka Harry என்ற உணவகத்தை நிறுவ தொடங்கினார். சைவ உணவை மேம்படுத்துவதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் தங்கள் முதல் விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்.
3. ரவீந்திர ஜடேஜா- Jaddu’s Food Field
ரவீந்திர ஜடேஜா தனது சிறப்பான ஆல்ரவுண்ட் திறமையால் இந்திய அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார்.
நட்சத்திர இந்திய வீரர் பிப்ரவரி 2009 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், அதன் பின்னர், அவர் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் 300 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
ஜடேஜாவும் ராஜ்கோட்டில் உணவகம் நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். இவர் Jaddu’s Food Field என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா, ஒவ்வொரு முறையும் இந்திய ஆல்ரவுண்டர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் போது, வாடிக்கையாளர்களுக்கு இலவச இனிப்புகளை வழங்கி வருகிறார்.
4. ஷிகர் தவான்- The Flying Catch (Dubai)
ஷிகர் தவான் தனது அபாரமான பேட்டிங் திறமையால் அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது, கடந்த சில ஆண்டுகளாக தனது மோசமான ஆட்டத்தால் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் துபாயில் ஓர் உணவகத்தை தொடங்கினார். குறித்த நிறுவனமானது The Flying Catch என கூறப்படுகிறது.
ஷிகரின் உணவகம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களை கவர்ந்திழுத்து அவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உணவுடன், உலகின் தலைசிறந்த விளையாட்டுப் போட்டிகளின் போட்டிகளைக் காண விளையாட்டு ஆதரவாளர்களுக்கு சிறந்த சூழலையும் உணவகம் வழங்குகிறது.
5. சுரேஷ் ரெய்னா- Raina Indian Restaurant
சுரேஷ் ரெய்னா 2005-2018 வரை இந்திய அணிக்கு தனது சேவையை வழங்கினார். ஜூன் 2023 இல், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணவகத்தைத் தொடங்கினார்.
ரெய்னா தனது உணவகத்தை திறந்து வைக்கும் போது, கிரிக்கெட் மற்றும் உணவின் மீது தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாக கூறினார்.
குறித்த உணவகத்தில் சூடான சமோசாக்கள், தஹி பல்லா, பானி பூரி, சூப், ஜீரா ரைஸ், சைவ பிரியாணி போன்ற பல்வேறு ஆடம்பரமான இந்திய உணவுகள் பரிமாறப்படுகிறது.
6. குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன- Ministry of Crab (MOC)
இலங்கையின் ஜாம்பவான்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோர் விளையாடிய நாட்களில் தேசிய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
டிசம்பர் 2011 இல், ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா இலங்கையின் பிரபலமான சமையல்காரரான தர்ஷன் முனிதாசாவுடன் கூட்டணி வைத்து, கொழும்பில் Ministry of Crab (MOC) என்ற பெயரில் உணவகத்தை ஆரம்பித்தனர்.
இந்த உணவகம் இலங்கையின் கடல் உணவை ஊக்குவித்து இன்று வரையில் பிரபல்யமாக நடத்தப்பட்டு வருகிறது.
கொழும்பு மற்றும் மும்பையுடன், மாலத்தீவுகள், பாங்காக், ஷாங்காய், செங்டு மற்றும் மணிலா ஆகிய நாடுகளில் குறித்த நிறுவனம் கிளைகளை ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |