ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் சுட்டுக்கொலை! வீட்டில் கிடந்த சடலங்கள்
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வீட்டினுள் சடலங்களாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் கிடந்த சடலங்கள்
Salt lake cityக்கு தெற்கே சுமார் 245 மைல் தொலைவில் உள்ள Enoch City-யில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் சோதனை செய்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்களாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொல்லப்பட்ட எட்டு பேரில் 5 குழந்தைகள் என்பது அதிரவலைகளை ஏற்படுத்தியது. அனைவரது உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் இல்லை என்றும், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக நம்பவில்லை என்றும் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர மேலாளர்
Enoch City மேலாளர் ராப் டாட்ஸன் இச்சம்பவம் குறித்து கூறுகையில், 'இங்கு வாழும் மக்களின் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். இந்த குடும்பத்தை நாம் அனைவரும் அறிவோம். நம்மில் பலர் அவர்களுடன் தேவாலயத்திலும், சமூகத்திலும் சேவை செய்துள்ளோம். மேலும் இந்த நபர்களுடன் பள்ளிக்கு சென்றுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும் முயற்சியில் பைடன் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.