ஓடும் பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! சிறுமியின் சகோதரி உட்பட 3 பேர் கைது
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், சுல்தான்பூர் மாவட்டத்தில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு சொகுசு பஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. வாகனத்தை சோதனை செய்தபோது, பேருந்தின் கடைசி இருக்கையின் கீழ் இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று குழந்தைகள் காணப்பட்டதாக பல்திராய் வட்ட அலுவலர் ராஜாராம் சவுத்ரி தெரிவித்தார்.
விசாரணையின் போது, 15 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அறியப்பட்டது, என்று சவுத்ரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரி (Step-Sister), பஸ் டிரைவர் மற்றும் பேருந்தில் பயணித்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறுமி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று சவுத்ரி கூறினார்.