இலங்கையிலிருந்து தப்பியோட முயன்ற குற்றவாளி: மடக்கி பிடித்த பொலிஸார்
நாட்டை விட்டு தப்பியோட முயன்ற நபரை இலங்கை விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தப்பியோட முயன்ற குற்றவாளி
இலங்கையில் ஆகஸ்ட் 22ம் திகதி பொரளை கர்தமனாவத்தை பகுதியில் சந்தேக நபர் ஒருவர் மற்றொரு நபரை சுட்டுக் கொல்ல முயன்றதை அடுத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சந்தேக நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள முக அங்கீகார முறை மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுற்றுலா விசாவில் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |