ஜனாதிபதி ஒருவரால் மட்டும் முடியக்கூடிய காரியம் இல்லை: ஜெலென்ஸ்கி அதிரடி!
ரஷ்யாவுடன் மோதலுக்கு முக்கிய காரணமான கிரிமீயா மற்றும் டான்பாஸ் பிரச்சனைகள் ஜனாதிபதி ஒருவரால் முடிவுசெய்யப்பட்டு தீர்க்கக்கூடிய விஷயம் அல்ல என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ-வில் இணைய கூடாது, உக்ரைனின் டான்பாஸ் பகுதியை சுகந்திர நாடக அறிவிக்கவேண்டும், மற்றும் கிரிமீயா பகுதியை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா நான்காவது வாரமாக ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது.
நான்கு வாரகால போரில் இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இருப்பினும் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படாத சூழ்நிலையே தொடர்ந்து வருகிறது.
#Zelenskyy in an interview with #Ukrainian TV channel Suspilna: "The issue of #Crimea and #Donbas is a hard story for everyone. This issue cannot be solved only by the president, it is a long process, it must be solved by both the Rada and the people of #Ukraine". pic.twitter.com/ideotPqhOO
— NEXTA (@nexta_tv) March 22, 2022
இந்தநிலையில், நேற்று உக்ரைனில் உள்ள தொலைக்காட்சி சேனல் சஸ்பில்னாக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அளித்துள்ள பேட்டியில், கிரிமீயா மற்றும் டான்பாஸ் பிரச்சனைகள் ஜனாதிபதி ஒருவரால் முடிவுசெய்யப்பட்டு தீர்க்கக்கூடிய விஷயம் அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையில் தீர்வு காண்பது என்பது நீண்டகால மற்றும் மிகவும் கடினமான விஷயம், இந்த பிரச்சனையானது ராடா மற்றும் உக்ரைனின் பொதுமக்கள் இருவராலும் இணைந்து முடிவு செய்யப்படவேண்டிய விடயம் என தெரிவித்துள்ளார்.
ராடா என்பது உக்ரைனின் வெர்கோவ்னா ராடா என்று அழைக்கப்படும் ஒருமித்த நாடாளுமன்றமாகும், இதில் மொத்தம் 450 பிரதிநிதிகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.