ரஷ்யாவில் வெடித்து சிதறிய எரிபொருள் டேங்குகள்: உக்ரைன் ராணுவம் கொடுத்த பதிலடி
உக்ரைன் ராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவிலுள்ள எரிபொருள் டேங்குகள் வெடித்து சிதறியுள்ளன.
ரஷ்யாவின் திடீர் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் இச்சமயத்தில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி அன்று, நள்ளிரவில் ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நகரின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
@reuters
இந்த தாக்குதலால் நகரங்களின் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 25 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாகவும், பலரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனிலுள்ள உமன் என்ற நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கட்டிடங்கள் மட்டும் சாலைகள் சேதமடைந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் கொடுத்த பதிலடி
இந்நிலையில் நேற்று உக்ரைன் ட்ரோன் மூலமாக ரஷ்யாவின் எல்லைக்குள் உள்ள, கிரிமியாவின் முக்கிய நகரமான செவஸ்டோபோல் பகுதியில் எரிபொருள் தொட்டிகள் வெடித்து சிதறியுள்ளன.
@reuters
இந்த விபத்தில் பெரிதாக உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஆளுநர் மிகைல் ரஸ்வோஜாயேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
@theguardian
திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அடுத்தடுத்து இருந்த மூன்று பிரமாண்ட எரிபொருள் டேங்குகள் வெடித்ததில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.
கடந்த 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பம், மாஸ்கோவின் கருங்கடல் கடற்படைக்கான முக்கிய கடற்படை தளத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.