நாடாளுமன்ற கலவரம் தொடர்பில் டிரம்ப் மீது குற்றவியல் வழக்குப்பதிவு! வெளியான தகவல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கலவரம்
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோ பைடனுக்கு ஜனாதிபதி சான்றிதழில் கையெழுத்திடும் நிகழ்வை தடுக்க, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஐந்து பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
@Reuters
குற்றவியல் வழக்கு
இந்த நிலையில் கலவரம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. அத்துடன் கலவரம் தொடர்பில் டிரம்ப் மீது கிளர்ச்சியைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று குற்றவழக்குகள் பதிய விசாரணை குழுவானது நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
@AP/Rebecca Blackwell
முன்னதாக, அமெரிக்க அரசியல் வரலாற்றில் இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரே ஜனாதிபதி என்ற அவப்பெயரை டிரம்ப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.