புடினுடைய இரகசிய காதலிக்கு நெருக்கடி... குறிவைக்கும் பல நாடுகள்
புடினுடைய இரகசிய காதலியைக் குறிவைத்து பல நாடுகள் தடைகள் விதித்துள்ளன.
புடினுடைய இரகசிய காதலி என் அழைக்கப்படுபவர் Alina Kabaeva. ஏற்கனவே புடினுடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது அவர் புடினுடைய மூன்றாவது குழந்தையை சுமப்பதாகக் கூறப்படுகிறது.
முன்பு Alina மீது தடைகள் விதித்தால், தேவையில்லாமல் புடினுடைய கோபத்துக்கு ஆளாகக் கூடும் என அமெரிக்கா முதலான நாடுகளே தயங்கி நின்ற நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவல் உலகம் முழுவதும் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்த, இப்போது பல நாடுகள் புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது தடைகள் விதிக்கத் துவங்கிவிட்டன.
ஒலிம்பிக் தடகள வீரங்கனையான Alina மீது மட்டுமின்றி, புடினுடைய முன்னாள் மனைவியான Lyudmila Ocheretnaya மீதும் மே மாதத்தில் பிரித்தானியா தடைகள் விதித்தது.

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் Alina முதலான 1,158 பேர் மீதும், 98 நிறுவனங்கள் மீதும் தடைகள் விதித்தது.
இந்நிலையில், நேற்று Alina முதலான 16 ரஷ்யர்கள் மீது அவுஸ்திரேலியாவும் தடைகள் விதித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியுடன் தவறான உறவு வைத்திருப்பவர், அவரது இரகசிய காதலி என்றெல்லாம் அழைக்கப்படும் Alina மீது மேலும் தடைகள் விதிக்கப்பட்டுள்ள விடயம் புடினுக்கு மற்றொரு பெரிய அடி என கருதப்படுகிறது.

