கரூர் விவகாரத்தில் விஜயை கைது செய்வதில் தொடரும் நெருக்கடி.., விரிவான காணொளி
தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞரும், அரசியலாளருமான கே.எஸ்.ராதா கிருஷ்னன் முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளார்.
தொடரும் நெருக்கடி
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணம், எப்படி நடந்தது என்பதை காவல்துறை கவனிக்க வேண்டும். ஆனால், அவர்கள் கவனிக்கவில்லை என்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்னன்
மேலும், இந்த விடயத்தில் தமிழக அரசு, தமிழக வெற்றி கழகம், பொதுமக்கள் ஆகிய மூவரும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
கரூர் கூட்டத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் சரியான நேரத்தில் வந்திருக்க வேண்டும். மேலும், இந்த விடயத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அச்சப்படுகிறது.
விஜய்க்கு அரசியல் அனுபவம் சம்மந்தமான ஆட்கள் இல்லை. இவர்களை நம்பியது விஜயின் பிழை என்றார்.
மேலதிக விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |