இது அருவருப்பாகவும், ஆபாசமாகவும் தெரிகிறது! ரொனால்டோ மற்றும் காதலி மீது கடும் விமர்சனம்
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டாவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளித்த நிலையில் அது அருவருப்பாகவும், ஆபாசமாகவும் உள்ளது என பிரபல அரசியல்வாதி விமர்சித்துள்ளார்.
ரொனால்டோவுக்கு காதல் தந்த பரிசு
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Dawn) கார் ஒன்றை சமீபத்தில் பரிசாக வழங்கினார்.
இந்த காரை சமீபத்தில் ரொனால்டோ ஸ்பெயின் நாட்டின் நகரமான மேட்ரிட்டில் ஓட்டியபடி சென்ற காட்சிகள் வெளியானது. இதை ஸ்பெயின் அரசியல்வாதியான கான்டாப்ரியாவின் தன்னாட்சி சமூகத்தின் தலைவர் மிகுல் ஏஞ்சல் ரிவிலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
sportskeeda
சாமானியர்களை பாதித்துள்ளது
அதன்படி, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பணவீக்க பிரச்சனைகள் தற்போது சாமானியர்களை பாதித்துள்ளது. மக்கள் வேதனையை அனுபவிக்கும் இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் கார் ஓட்டும் வீடியோ வெளிவருவது தார்மீகமல்ல.
இந்த வகையான அணுகுமுறைகள் அருவருப்பாகவும், ஆபாசத்தை போலவும் தெரிகிறது என காட்டமாக கூறியுள்ளார்.