ரொனால்டோவை நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்: சவுதி சட்டத்தரணி ஆவேசம்
கால்பந்து உச்ச நட்சத்திரம் ரொனால்டோ தமது ரசிகர்கள் முன்னிலையில் அருவருப்பாக நடந்து கொண்டமையால் அவர் சவுதி அரேபியாவைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என சட்டத்தரணி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரொனால்டோ அருவருப்பான செயல்
செவ்வாய்க்கிழமை இரவு ரொனால்டோ இடம்பெற்றுள்ள அல் நஸர் அணிக்கும் அல் ஹிலால் அணிக்கும் போட்டி நடந்தது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் அல் நஸர் வெற்றிபெற்றது.
@getty
ஆனால் இந்த ஆட்டத்தை காண வந்த ரசிகர்களில் சிலர் மெஸ்ஸி, மெஸ்ஸி என கத்தி ரொனால்டோவை வெறுப்பேற்றியுள்ளனர். இதில் கோபமடைந்த ரொனால்டோ பதிலடியாக அருவருப்பான செயலை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தை குறிப்பிட்டு சவுதி சட்டத்தரணி நூஃப் பின் அகமது, ரொனால்டோவின் செயலுக்காக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இது பொது அவமதிப்பு குற்றமாக கருதப்படுகிறது, மேலும் வெளிநாட்டவர் செய்தால் கைது செய்து நாடு கடத்தப்படும் குற்றங்களில் இதுவும் ஒன்றாகும் என்றார்.
அணியில் இருந்து நீக்க வேண்டும்
மட்டுமின்றி, இந்த விவகாரத்தை தாம் வெறுமனே விட்டுவிடப் போவதில்லை எனவும், முறையான புகார் அளிக்க இருப்பதாகவும் நூஃப் பின் அகமது தெரிவித்துள்ளார்.
Credit: twitter
ரொனால்டோவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ள சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஒருவர், அல் நஸர் நிர்வாகம் உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ஆட்டத்தின் நடுவே ரொனால்டோவுக்கு குறிப்பிட்ட பகுதியில் காயம் எற்பட்டதாலையே, அப்படியான செய்கையில் அவர் ஈடுபட்டதாக அல் நஸர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.