உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே! அறிமுக போட்டியிலேயே வெற்றி..ரொனால்டோ பெருமிதம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகனான ரொனால்டோ ஜூனியர், தனது அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
ரொனால்டோவின் மகன்
U-15 கால்பந்து போட்டியில் போர்த்துக்கல் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ டோஸ் சாண்டோஸ் அவேய்ரோ (Cristiano dos Santos Aveiro), போர்த்துக்கல் தேசிய அணிக்காக அறிமுகமானார்.
ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் களத்தில் இறங்கிய ரொனால்டோ ஜூனியர் ஆதிக்கம் செலுத்தினார். அவரது அறிமுகமானது கிறிஸ்டியானோவுக்கு ஒரு பெருமையான தருணமாக அமைந்தது.
இறுதியில் போர்த்துக்கல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மகனை நினைத்து பெருமை
தனது அறிமுக போட்டியிலேயே வெற்றியை ருசித்த மகனை நினைத்து பெருமைப்படுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
தற்போது அல் நஸர் அகாடமியில் Forward வீரராக விளையாடி வரும் கிறிஸ்டியானோ டோஸ் சாண்டோஸ், தரவரிசையில் படிப்படியாக உயர்ந்து வருகிறார்.
அதேபோல் ஜுவெண்டர்ஸின் யூத் அகாடமிக்காக விளையாடியபோது அவர் 58 கோல்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Parabéns pela estreia por @selecaoportugal, filho. Muito orgulho em ti! pic.twitter.com/BWbKDewDnZ
— Cristiano Ronaldo (@Cristiano) May 13, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |