அவ்வளவு சம்பளம் கொடுத்தும், சமையல்காரர் கிடைக்காமல் தேடிவரும் ரொனால்டோ!
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகலில் உள்ள தனது வீட்டிற்கு தனிப்பட்ட சமையல்காரரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
ரொனால்டோ கட்டிவரும் வீடு
ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கை முடிந்த பிறகு போர்ச்சுகலில் வசிக்க திட்டமிட்டுள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு குயின்டா டா மரின்ஹாவில் ஒரு நிலத்தை வாங்கினார். அவரது இல்லத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொனால்டோவால் ஏன் சமையல்காரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை?
தகவல்களின்படி, ரொனால்டோ மற்றும் அவரது கூட்டாளி ஜார்ஜினா ரோட்ரிகஸ் இருவரும் பாரம்பரிய போர்த்துகீசிய உணவுகள் மற்றும் சுஷி போன்ற சர்வதேச உணவுகளை சமைக்க தெரிந்த சமையல்காரரை தேடுவதால், அப்படிப்பட்ட சமையல்காரரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சமையல்காரருக்கு ரொனால்டோ வழங்கு சம்பளம்
ஆடம்பரமான மாளிகையில் ஜப்பானிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட பகுதி இருப்பதாக கூறப்படுகிறது. ரொனால்டோ ஒரு சமையல்காரருக்கு மாதம் ஒன்றுக்கு 4,500 பவுண்டுகள் (இந்திய பணமதிப்பில் ரூ. 4 லட்சத்து 52 ஆயிரம்) வழங்குவதாகக் கூறப்படுகிறது, ஆனால், இதுவரை அந்த வேலைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
Photo: Instagram/Cristiano Ronaldo
சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் அணியுடனான 2 ஆண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு, ரொனால்டோ தனது காதல் மற்றும் ஐந்து குழந்திகளுடன் தற்போது ரியாத்தின் மையத்தில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
ரொனால்டோ தனது முதல் ஆட்டத்தை வியாழக்கிழமை சவுதி அரேபியாவில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுக்கு (PSG) எதிராக ரியாத் XI அணியின் ஒரு பகுதியாக விளையாடினார். இப்போட்டியில் அவர் PSG அணிக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்தார்.