புலம்பெயர்தல் தொடர்பில் பிரான்ஸ் கூறிய விமர்சனம்: இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல்
புலம்பெயர்தல் தொடர்பில் இத்தாலி குறித்து பிரான்ஸ் தெரிவித்த விமர்சனம் ஒன்றால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் விமர்சனம்
இத்தாலி புலம்பெயர்தலைக் கையாளும் முறை குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin முன்வைத்த விமர்சனமே இருநாடுகளுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
வானொலி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்த Darmanin, இத்தாலி பிரதமரான Giorgia Meloniயால், தான் எந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அந்த புலம்பெயர்தல் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்று கூறினார்.
Photograph: Bertrand Guay/AFP/Getty Images
அத்துடன், Giorgia, மத்தியதரைக்கடலை ஏராளம் புலம்பெயர்வோர் கடப்பதை முடிவுக்குக் கொண்டுவருவேன் என வாக்காளர்களிடம் பொய் சொல்லியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin.
இத்தாலி பதில் நடவடிக்கை
இத்தாலி வெளியுறவு அமைச்சரான Antonio Tajani, பாரீஸ் சென்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Catherine Colonnaவை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
Photograph: Franck Robichon/AFP/Getty Images
ஆனால், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmaninஉடைய விமர்சனத்தால் வருத்தமடைந்துள்ள Antonio, பாரீஸ் செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
நான் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Catherine Colonnaவை சந்திப்பதற்காக பாரீஸ் செல்லப்போவதில்லை என்று கூறிய Antonio, ட்விஒட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இத்தாலி அரசையும் நாட்டையும் அவமதிக்கும் வகையில் அமைச்சர் Darmanin தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்றும், பொதுவான ஐரோப்பிய சவால்களை எதிர்கொள்ளும் விதம் இதுவல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.