இலங்கை தமிழ்ப்பெண்ணை ஏமாற்றியது பற்றி கேட்க மாட்டீங்களா? நடிகர் ஆர்யா மாமியார் மீது எழுந்த விமர்சனம்
ஆர்யாவை வாழ்த்தி அவர் மாமியார் சமூகவலைதளத்தில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.
ஜேர்மனியில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகாரை அளித்தார்.
அதன்படி அவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக கூறியிருந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் ஆர்யாவுடன் தான் பேசிய சேட்டிங் ஆதாரங்களையும் இலங்கை பெண் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆர்யாவும், அவர் மனைவி சாயிஷாவும் நேற்று தங்கள் திருமண நாளை கொண்டாடினர். இதையடுத்து தம்பதியை வாழ்த்தி சாயிஷாவின் தாயார் ஷாயீன் சமூகவலைதளத்தில் பதிவு செய்தார்.
அந்த பதிவை தொடர்ந்து சமூகவலைதள வாசிகள் ஷாயீன் மீது விமர்சனத்தை வைத்துள்ளனர். அதாவது, உங்கள் மாப்பிள்ளை ஆர்யா இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ரூ. 70 லட்சம் மோசடி செய்திருக்கிறார்.
ஆர்யாவுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களை அந்த பெண் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முறையே புகாரும் அளித்திருக்கிறார். இது குறித்து ஆர்யாவிடம் கேள்வி கேட்டீர்களா? அது தொடர்பாக பேசாமல் வாழ்த்துகிறீர்களே என விமர்சித்துள்ளனர்.