சர்வாதிகாரம் என விமர்சித்த ஜோ பைடன் இப்படி செய்யலாமா? எழுந்த விமர்சனங்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து அரசாணைகளை வெளியிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரொனா தடுப்பு, குடியேற்ற விதிகள் உட்பட தொடர்ச்சியாக 36க்கும் மேற்பட்ட அரசாணைகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் பைடன் உத்தரவு பிறப்பித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரச்சாரத்தின் போது, ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்தே முடிவெடுப்பேன் எனவும், சர்வாதிகாரி மட்டுமே அரசாணை மூலம் ஆட்சி செய்வார் எனவும் பைடன் கூறியதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஆனால் முந்தைய டிரம்ப் ஆட்சியில் இருக்கும் குறைகளை சரிசெய்யவும், கொரோனா நெருக்கடி காரணமாகவும் உடனடியாக அரசாணைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக பைடன் தரப்பிலிருந்து விளக்கம்