யூரோ கிண்ணத்தில் வரலாற்று சாதனை படைத்த குரோஷிய ஜாம்பவான்
இத்தாலி அணிக்கு எதிரான யூரோ 2024 போட்டியில் குரோஷிய வீரர் லுகா மோட்ரிக் வரலாற்று சாதனை படைத்தார்.
Red Bull Arena Leipzig மைதானத்தில் நடந்த போட்டியில் இத்தாலி மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இப்போட்டியில் குரோஷிய ஜாம்பவான் வீரர் லுகா மோட்ரிக் 55வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
?? Luka Modrić sets the record as the oldest scorer in EURO history ?
— UEFA EURO 2024 (@EURO2024) June 24, 2024
Check out who else is included in the ten oldest scorers ??#EURO2024
அதனைத் தொடர்ந்து 90+8வது நிமிடத்தில் இத்தாலி வீரர் மட்டியா சக்கக்னி (Mattia Zaccagni) கோல் அடித்ததால், போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
லுகா மோட்ரிக் (Luka Modric) கோல் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்தார். அதாவது யூரோ கிண்ணத் தொடரில் அதிக வயதில் கோல் அடித்த வீரர் எனும் சாதனையை செய்துள்ளார்.
மோட்ரிக் 38 வயது மற்றும் 289 நாட்களில் கோல் அடித்துள்ளார். முன்னதாக போலந்தின் ஐவிகா வஸ்திக் (Ivica Vastic) 38 வயது 257 நாட்களில் இந்த சாதனையை செய்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |