குரோஷியாவில் பாடசாலைக்குள் புகுந்து இளைஞர் கத்திக்குத்து தாக்குதல்: ஆசிரியர், மாணவர்கள் காயம்
குரோஷிய நாட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமடைந்துள்ளனர்.
குரோஷிய தலைநகரில் பரபரப்பு
வெள்ளிக்கிழமை குரோஷியாவின் தலைநகரில் வாலிபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் மற்றும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்
மாநில செய்து நிறுவனமான ஹினா(Hina), இந்த தாக்குதலானது ஜாக்ரெப்பில்(Zagreb) உள்ள ஆரம்ப பள்ளியில் நடந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவமானது காலை 10 மணியளவில் Precko பகுதியில் நடந்து இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் கைது
கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதில் மாணவர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக வெளியான தகவல்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில் குரோஷிய ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், பள்ளி மாணவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடுவதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |