குளித்துக்கொண்டிருந்தவரை நண்பர்கள் கண் முன்னே இழுத்துச் சென்ற முதலை... அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
இந்தோனேஷியாவிலுள்ள நதி ஒன்றில், குளித்துக்கொண்டிருந்த ஒருவரை அவரது நண்பர்கள் கண் முன்னே முதலை ஒன்று கவ்வி இழுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Luther (51) என்ற நபர் Bebatu என்ற நதியில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென 13 அடி நீளமுள்ள முதலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
அவரது நண்பர்கள் சத்தமிட, அவர் அந்த முதலையிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடியிருக்கிறார்.
ஆனால், அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது அந்த முதலை. ஒரு முறை தண்ணீருக்கு மேலே வந்த அவரை அதற்குப் பிறகு காணவேயில்லை!
உடனடியாக அவரது நண்பர்கள் அதிகாரிகளுக்குத் தகவலளிக்க, அதிகாரிகள் வந்து தேடிய நிலையில், அவரது உடல் கிடைக்கவேயில்லை.
இப்போது, அந்த நதியில் முதலை ஒன்று உள்ளதாகவும், ஆகவே, அதில் இறங்கவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்புப் பலகை ஒன்றை அமைத்துள்ளார்கள் அதிகாரிகள்.
சிறிது நாட்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற ஒரு சிறுவனை முதலை ஒன்று தாக்கி இழுத்துச் சென்றதாக ஒரு செய்தி வெளியானது. ஆக, இந்தோனேஷியாவில் இப்படி மனிதர்களை முதலைகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.