100 கிலோ முதலையை உண்ணும் 900 கிலோ ராட்சத முதலை! கமெராவில் பதிவான புகைப்படம்
தென் ஆப்பிரிக்காவில் ராட்சத முதலை ஒன்று, சிறிய முதலையை உண்ணும் பயங்கரமான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் Sunset Dam-ல் உள்ள Kruger National Park-ல் சுமார், 900 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை, சுமார் 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசி காரணமாக உண்ணுகிறது.
இந்த காட்சியை பிரபல புகைப்பட கலைஞரான Stephen Kangisser பார்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வாழ்நாளில் இது ஒரு முறை காணக்கூடிய அரிய காட்சி, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு இதை காணும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
காடுகளில் பல சம்பவங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதற்கு முன்பு இப்படி எதுவும் பார்த்ததில்லை. இருப்பினும், அந்த சிறிய முதலையை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த காட்சியை அந்த பூங்காவில் இருந்த பெரும்பாலானோர் பார்த்தார்கள். அவர்களும் இதை ஒருநாளும் மாறமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.