புளோரிடாவில் வீட்டின் நீச்சல் குளத்தில் புகுந்த 10 அடி நீள முதலை: வைரல் வீடியோ
அமெரிக்காவில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் குளத்தில் புகுந்த 10 அடி நீள முதலையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக பிடித்தனர்.
நீச்சல் குளத்தில் புகுந்த முதலை
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் குளத்தில் 10 அடி நீள முதலை ஒன்று புகுந்தது.
இதையடுத்து முதலை புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
Humans weren't the only ones enjoying this residential swimming pool in Florida.
— ABC News (@ABC) June 13, 2023
A trespassing crocodile also did—before it was successfully restrained and released into the wild. https://t.co/cWJf37WRyC pic.twitter.com/oR0eCTPKHA
முதலை மீட்ட வனத்துறை அதிகாரிகள்
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் முதலையை கயிறு போன்ற பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி பிடிக்க முயன்றனர்.
ஆனால் வனத்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க முதலை தன்னுடைய உடலை சுற்றி சுழன்றது.
இறுதியில் ஒருவழியாக 10 அடி நீள முதலையை வனத்துறை அதிகாரிகள் போராடி பிடித்தனர், அத்துடன் அதனை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்தும் சென்றனர்.
Reuters