சூட்கேஸில் இருந்த அபூர்வ முதலையின் தலை: இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி
Crocodile Head Found in Italy Passengers Suitcase: பயணி ஒருவரின் சூட்கேஸில் முதலையின் தலை இருந்த நிலையில் அதனை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சூட்கேஸில் முதலை தலை
இத்தாலியின் துரின் நகரில் அமைந்துள்ள காசெல்லே விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேஸில் இருந்த அழியும் விளிம்பு நிலையில் உள்ள அபூர்வ வகை முதலையின் தலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை அடுத்து, முதலையின் தலையை கொண்டு வந்த இத்தாலிய நபர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல்காரரான இத்தாலிய நபர் அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் காசெல்லே விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.
முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு சாதாரண பேக்கிங் பேப்பரில் சுற்றப்பட்டிருந்ததால், கைது செய்யப்பட்ட நபர் எளிதாக அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் தப்பியுள்ளார்.

ஆனால் இத்தாலிய விமான நிலைய அதிகாரிகளின் விரிவான சோதனையின் போது சூட்கேஸிற்குள் முதலையின் தலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டனை மற்றும் அபராதம்
சூட்கேஸில் முதலையின் தலையை கடத்தி வந்த நபருக்கு எதிராக, முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் இன்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதியை சேர்ந்த முதலையை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனையாக சுமார் ரு.2.20 கோடி அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |