முதலையிடம் சிக்கிய நபரை காப்பாற்ற முயன்ற தம்பதி: இறுதியில் நேர்ந்த சோகம்
மெக்சிகோவில் முதலையிடம் சிக்கிய 28 வயது இளைஞரை, கலிபோர்னியா தம்பதி காப்பாற்ற முயற்சித்தது தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திகிலூட்டும் அலறல் சத்தம்
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேமி யெட்டர், தனது வருங்கால கணவர் கிறிஸ் பியூரி மற்றும் பதின்வயது மகளுடன் மெக்சிகோவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்திருக்கிறார்.
அவர்கள் நீச்சல் குளத்திற்கு செல்லும் வழியில், திகிலூட்டும் அலறல் சத்தங்களைக் கேட்டுள்ளனர். அப்போது 28 வயது இளைஞர் ஒருவர் முதலையிடம் சிக்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
இராட்சத முதலை அவரை இழுத்துச் சென்றதைப் பார்த்து பதறிய ஜேமி, கிறிஸ் உடனடியாக இளைஞர் காப்பாற்ற இறங்கியுள்ளனர்.
காப்பாற்ற முடியவில்லை
உயிர்காக்கும் மிதவை ஒன்றை இளைஞர் இருக்கும் திசையில் ஜேமி வீச முயன்றார்; ஆனால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்நபரால் அதை சென்றடைய முடியவில்லை.
இறுதியில் குறித்த இளைஞரை அந்த தம்பதியால் காப்பாற்ற முடியவில்லை. சுமார் 12 மணிநேரத்திற்குப் பிறகு, சனிக்கிழமை அதிகாலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
பின்னர் உயிரிழந்த நபர் மெக்சிகோவைச் சேர்ந்த இர்விங் என்றும், தனது நண்பர்களுடன் சுற்றுலா நகரத்திற்கு வந்தபோது முதலையிடம் சிக்கியது தெரிய வந்தது.
துயர சம்பவம் குறித்து ஜேமி யெட்டர் கூறும்போது, "அந்த முதலை எவ்வளவு பெரியது என்றால், அதன் தலை என் உடற்பகுதியின் நீளத்திற்கு இருந்தது; அதன் வால் என் கால்களை விடத் தடிமனாக இருந்தது. அது அவரைத் திருப்பிக்கொண்டு நீருக்கு அடியில் இழுத்துச் சென்றது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |