அயோத்தி ராமரை தரிசிக்க திரளும் பக்தர்கள் கூட்டம்.., நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்கு பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு அனுமதி
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். மேலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர்.
நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அலைமோதும் கூட்டம்
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் ராமரை தரிசிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்பினர். இதனால், இன்று அதிகாலை 3 மணி முதல் ராமர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
இதனால் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களும் ராமரை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
தரிசனத்திற்காக காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |