லண்டனில் NHS வேலையை விட்டுவிட்டு கனடாவில் குடியேறிய நர்ஸ்: அவர் கூறும் காரணம்
தெற்கு லண்டனில் குரோய்டன் பகுதியை சேர்ந்த நர்ஸ் ஒருவர் NHS வேலையை விட்டுவிட்டு கனடாவில் குடியேறியதுடன் தற்போது 50 சதவிகிதம் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலைச்சுமை காரணமாக
குரோய்டன் நகரில் Thornton Heath பகுதியை சேர்ந்தவர் 50 வயதான Audrey Barnwell. இவர் NHS நர்சாக பணியாற்றி வந்துள்ள நிலையில், அதிக வேலைச்சுமை காரணமாக வாழ்க்கையில் முதல்முறையாக நாள்பட்ட உடல் மற்றும் மன சோர்வால் அவதிப்பட்டார்.
மட்டுமின்றி, பணி முடித்து நள்ளிரவிலோ அல்லது விடிகாலையிலோ பல மணி நேரம் நடந்து வீடு வந்து சேர்வதும் அவருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கேயாவது சென்று, புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும், நிம்மதியான வேலையை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆசை அவரது அடிமனதில் உருவாகத் தொடங்கியது.
2008ல் விரிவானத் தேடலுக்கு பின்னர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவரில் குடியேற முடிவு செய்தார். பிரித்தானிய அரசாங்கத்தின் மிகப் பெரிய பங்களிப்பு NHS என பெருமையுடன் கூறும் அவர், அங்குள்ள பணிச் சூழல் ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளுக்கு உரிய கவனிப்பை அளிக்க, NHS நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கனடாவில் குடியேறிய பின்னர், ஆட்ரியால் வித்தியாசத்தை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மிக நெருக்கடியான சூழல்
மட்டுமின்றி, செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அவர்களின் பணிக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டதைக் கண்டு ஆட்ரி ஆச்சரியப்பட்டுள்ளார்.
லண்டனில் 22,000 பவுண்டுகள் அளவுக்கு சம்பளமாக வாங்கியவருக்கு, கனடாவில் 30,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது. மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் சுகாதார ஊழியர்கள் மற்றும் நர்ஸ்கள் பணியாற்றுவதால், நோயாளிகளுக்கு உரிய கவனிப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் வாரத்தில் 80 மணி நேரம் பணியாற்றும் மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டவர், தற்போது வாரத்தில் 38 மணி நேரம் பணியாற்றும் சூழலை அனுபவித்து வருகிறார். மட்டுமின்றி, தமது வேலையில் அடுத்தடுத்த கட்டங்களை மிக விரைவாக எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |