இஸ்ரேலுக்கு அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா... சட்டவிரோதம் என அறிவிப்பு
ரஃபா தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்துள்ள அமெரிக்கா, தற்போது அடுத்த நெருக்கடியை அளித்துள்ளது.
46 பக்க அறிக்கை
காஸாவில் இனி அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது அமெரிக்கா முன்வைக்கும் மிக அழுத்தமான விமர்சனம் இதுவென்றே பார்க்கப்படுகிறது. ஆனால் போரின் நெருக்கடிக்கு நடுவே இஸ்ரேல் எந்த ஆயுதங்களை பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபடுகிறது என்பதில் உறுதியான தரவுகள் இல்லை என்றும் அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜோ பைடன் நிர்வாகம் 46 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ரஃபா மீதான இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்க ஆதரவு நாடுகள் அழுத்தமளித்துவரும் நிலையில்,
தற்போது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக கூறப்படுவது, இஸ்ரேலுடனான அமெரிக்காவின் உறவை மேலும் நெருக்கடிக்கு தள்ளும் என்றே கூறப்படுகிறது.
மறு ஆய்வுக்கு உட்படுத்த நேரிடும்
ரஃபா பகுதி மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து அழுத்தமளித்து வருகிறது. மிக முக்கியமான ஆயுத ஏற்றுமதி ஒன்றை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலுடனான நீண்ட கால ஆதரவு என்ற கொள்கை முடிவையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்க நிர்வாகத்துடன் முறையாக இஸ்ரேல் ஒத்துழைக்க மறுத்து வந்துள்ளது என்றும், ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் விதி மீறலில் ஈடுபடவில்லை என்றே இஸ்ரேல் கூறி வந்துள்ளது.
காஸா மீதான 7 மாதத் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 34,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் திடீரென்று இஸ்ரேல் எல்லையில் முன்னெடுத்த தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதை அடுத்தே நெதன்யாகு அரசாங்கம் போர் பிரகடனம் செய்துகொண்டது.
தற்போதும் 133 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் படைகளிடம் பிணைக்கைதிகளாக உள்ளனர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |