அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: சரிந்தது கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டு இருப்பது உலக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்த உடன்படுக்கையை அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரிகள் போன்ற முக்கிய அம்சங்கள் அடங்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிய பிராந்தியத்தில் 5 நாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி டிரம்ப் இந்த வார இறுதியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு நடத்தி வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக உறவு முன்னேற்றம், எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு உதவியுள்ளது.

சரிந்த கச்சா எண்ணெய் விலை
டிசம்பர் மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) 1.19% குறைந்து பேரல் ஒன்றுக்கு $60.77 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைப்போல, டிசம்பர் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் க்ரூட்(Brent Crude) 1.11% குறைந்து பேரல் ஒன்றுக்கு $65.21 ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |