2 எழுத்துக்காக ரூ.634 கோடி செலவிட்ட தொழிலதிபர் - என்ன திட்டம்?
டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.
AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டொமைன்
தற்போது ai.com என்ற டொமைனை வாங்க தொழிலதிபர் ஒருவர் 70 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.634 கோடி) செலவிட்டுள்ளார்.

Crypto.com நிறுவனர் கிறிஸ் மார்சலே(Kris Marszalek) ai.com டொமைனை 70 மில்லியன் டொலருக்கு வாங்கியதாக அறிவித்துள்ளார்.
தற்போது இதுவே உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டொமைன் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மலேசியாவை சேர்ந்த தொழிலதிபரான அர்சியன் இஸ்மாயில் என்பவரிடமிருந்து இதை வாங்கியுள்ளார். அதேவேளையில், இந்த பரிவரித்தனை முழுவதும் கிரிப்டோ மூலமாக நடைபெற்றுள்ளது.

இந்த ai.com தளம், வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்புதல், செயலி பயன்பாடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான தனிப்பட்ட AI முகவரை வழங்குகிறது.
I purchased https://t.co/ac2AqjBNxj in April. Since that time, we created a team that has been steadily building. There are always twists and turns, but I’m excited with our first launch this Sunday during the Super Bowl. pic.twitter.com/BbqVo1bQLZ
— Kris | ai.com (@kris) February 6, 2026
"இன்னும்,10 முதல் 20 ஆண்டுகளில் AI நமது வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப அலைகளில் ஒன்றாக இருக்கும்" என கிறிஸ் மார்சலே தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |