Cryptocurrency விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை!
இந்தியாவில் Cryptocurrency விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உரிய விதிகளை வகுக்கும் வரை Cryptocurrency விளம்பரங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், முறைப்படுத்தப்படாத கிரிப்டோ நாணய வர்த்தகங்களில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதாகவும், இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Cryptocurrency வர்த்தகத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதை பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசு எச்சரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Cryptocurrency மூலம் அதிக வட்டி தருவதாக கூறி, இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் சுட்டிகாட்டப்பட்டிய மனுதாரர், எந்த விதிமுறைகளும் இல்லாததால் கிரிப்டோ கரன்சிகள் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.