ஒரே அடியாக சரிந்த Crypto சந்தை! முதலீட்டாளர்கள் சோகம்
Cryptocurrency சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருவதால், அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cryptocurrency தான் இனி முதலீட்டாளர்களுக்கு எதிர்காலமே என்ற நிலை உருவாகிவந்தது. அதிரைக்கு ஏற்ப சில மாதங்கள் முன்பு வரையில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பொற்காலமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதி கிரிப்டோ சற்று நிலை தடுமாறியது.
2022 தொடக்கம் அந்த அனைத்து இழப்பையும் ஈடுசெய்யும், மிகப்பெரிய லாபம் வரும் நம்பிக்கொண்டிந்த நிலையில், ஜனவரி மாதம் மிகவும் மோசமான நிலைக்குக் கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதனால், கிரிப்டோ முதலீட்டாளர்களின் நிலையும் தலைகீழாக மாறியுள்ளது.
நவம்பர் மாத உச்சத்தில் இருந்து ஜனவரி வரையில் ஏற்பட்டுள்ள சரிவு முதலீட்டாளர்களுக்கு இரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று கூறலாம்.
கிரிப்டோகரன்சி சந்தையில் மிகவும் முக்கியமான மற்றும் அதிகச் சந்தை மதிப்பு கொண்ட கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் இன்னும் உற்பத்தி செய்யப்படச் சில லட்சங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 2022 ஆரம்பம் முதல் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்று உச்ச அளவான 1,00,000 டொலர் அளவீட்டைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நவம்பர் மாதம் உச்ச விலையைத் தொட்ட பின்பு தொடர்ந்து சரிவை மட்டுமே பிட்காயின் எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக வெள்ளிக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 12 சதவீதம் சரிந்து 36,000 டொலருக்கு குறைவான அளவீட்டைத் தொட்டது.
மேலும் நவம்பர் மாத உச்ச விலையில் இருந்து பிட்காயின் மதிப்பு 45 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் Bitcoin சந்தை மதிப்பு மட்டும் சுமார் 600 பில்லியன் டொலர் அளவிற்குச் சரிந்து உள்ளது.
பிட்காயின் போலவே பிற முன்னணி கிரிப்போடகரன்சியும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் கிரிப்டோகரன்சின்யின் மொத்த சந்தை மதிப்பு நவம்பர் மாதத்தில் இருந்து சுமார் 1 டிரில்லியன் டொலர் அதாவது 1 லட்சம் கோடி டொலருக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
இந்தத் திடீர் மற்றும் தொடர் சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் எடுத்து முடிவு தான், ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்கவும், பணவீக்க பாதிப்புகளைக் குறைக்கவும், நாணய புழக்கத்தைக் குறைக்கவும், வட்டி விகிதத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பின்பு அனைத்து ஆபத்து நிறைந்த முதலீடுகளும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 90 நாட்களில் Bitcoin மதிப்பு 40.97 சதவீதமும், Ethereum 38.52 சதவீதமும், Cardano 50.08 சதவீதமும், Solana 46.69 சதவீதமும், Ripple 43.14 சதவீதமும், Dogecoin 45.83 சதவீதமும், Polkadot 58.73 சதவீதமும், Shiba Inu 48.54 சதவீதமும் சரிந்துள்ளது.