CSK 50வது வெற்றி! ரசிகர்களுக்கு பந்துகளை பரிசளித்த தோனி (வீடியோ)
சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓட்டங்களை சேர்க்க தடுமாறியது. CSK அணியின் வேகப்பந்து வீச்சாளரின் துல்லியமான பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் (24), பட்லர் (21) மற்றும் சாம்சன் (15) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
Simar Tu Sher! ??#CSKvRR #WhistlePodu ??
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
pic.twitter.com/Ac0wwcItUs
ரியான் பராக் 35 பந்துகளில் 47 ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 141 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ரசிகர்களுக்கு பரிசு
பின்னர் ஆடிய சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 22 ஓட்டங்களிலும், மொயீன் அலி 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டிய ஷிவம் தூபேவை 18 (11) ஓட்டங்களில் அஷ்வின் வெளியேற்றினார். எனினும் அணித்தலைவர் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இது சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 50வது வெற்றி ஆகும். போட்டி முடிந்ததும் தோனி மற்றும் CSK வீரர்கள் டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசளித்தனர்.
Etched in our memories! ?#YellorukkumThanks
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
pic.twitter.com/64h9j8tf95
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |