CSK அணிக்கு பாரிய பின்னடைவு - காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுஷ் மாத்ரே விலகல்

இது தொடர்பாக CSK அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் செய்தபோது மத்ரேவுக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது.
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2026
Ayush Mhatre has been ruled out of the remainder of IPL 2026 due to a left hamstring injury sustained while batting during the match against Sunrisers Hyderabad on April 18.
Ayush's injury will require a rehabilitation period of 6-12 weeks.
We wish Ayush… pic.twitter.com/7bGrFvqjY9
ஆயுஷ் மத்ரேவுக்கு 6 முதல் 12 வாரங்கள் வரை மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படும். ஆயுஷ் விரைவில் குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுஷ் மத்ரே 6 போட்டிகளில் விளையாடி, 33.50 சராசரி மற்றும் 177.87 ஸ்டிரைக் ரேட்டுடன். 2 அரைசதம் உட்பட 201 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ஏற்கனேவே அனுபவம் வாய்ந்த வீரரான தோனி அணியில் இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கபட்ட நிலையில், கடந்த வாரம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

தற்போது ஆயுஷ் மாத்ரேவும் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது பாரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 23 ஆம் திகதி மும்பையில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |